சீகிரியவில் உள்ளவை ‘சிங்க’ பாதமல்ல ‘புலி’ பாதம்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
சீகிரியவில் உள்ளவை ‘சிங்க’ பாதமல்ல ‘புலி’ பாதம்

சீகிரிய மலைக்குன்றின் உச்சியில், ராஜமாளிகைக்கு செல்வதற்கான வாயில் உள்ள மிருகமொன்றின் இரண்டு பாதங்களும், சிங்கத்தின் பாதங்கள் அல்ல என்றும் அவை புலியின் பாதங்கள் என்றும், ரங்கிரி-தம்புளை விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் இத்தாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்தார். 

உள்ளூர் மக்களை மட்டுமன்றி,  வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளையும் ஏமாற்றி, அங்கிருப்பது சிங்கத்தின் பாதமென்று நம்பவைக்கப்பட்டுள்ளது. அதனை உரிய திணைக்களம் சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

சீகிரியவில் இருப்பது சிங்கத்தின் பாதங்கள் அல்ல என்ற தலைப்பின் கீழ், அவரினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜமாளிகைக்குச் செல்வதற்கான வாயில் உள்ள மிருகத்தின் கால்களில், தலா மூன்று நகங்களை கொண்ட பாதங்களே உள்ளன. எனினும், சிங்கத்தின் பாதத்தில் முடிகளுடன் கூடிய நான்கு விரல்கள் இருக்கின்றன என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். 

அத்துடன், சிங்கத்தின் பாத அமைப்புக்கும் புலியின் பாத அமைப்புக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

மூலக்கதை