ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை விடுத்துள்ளார்.த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்கள் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மண்வளம் குறையும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும், குடிநீருக்கும் தட்டுபாடு ஏற்படும்.

எனவே காவிரி பாசன பகுதிகளில் விவசாயத்தை தவிர இதுபோன்ற ஆபத்தான எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது. தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை வலியுறுத்தி இத்திட்டத்தை கைவிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை