புளொட் , ஈ.பீ.ஆர்.எல்.எவ் அமைப்பினர் மோசடியை நிராகரித்து மாற்றுத் தரப்பிற்கு இடங்கினால் அவர்களுடன் இணைந்து செயல்படத் தயார் – க.குமார்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
புளொட் , ஈ.பீ.ஆர்.எல்.எவ் அமைப்பினர் மோசடியை நிராகரித்து மாற்றுத் தரப்பிற்கு இடங்கினால் அவர்களுடன் இணைந்து செயல்படத் தயார் – க.குமார்

புளொட் , ஈ.பீ.ஆர்.எல்.எவ் அமைப்பினர் மோசடியை நிராகரித்து மாற்றுத் தரப்பிற்கு இடங்கினால் அவர்களுடன் இணைந்து செயல்படத் தயார் என முன்னணியின் தலைவர் க.குமார் தெரிவித்தார்.

த.தே.ம.முன்னணியின் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

புளொட் , ஈ.பீ.ஆர்.எல்.எவ் அமைப்பினரும்  மோசடித் தலமையை  நிராகரித்து மாற்றுத் தரப்பிற்கு இடங்கினால் அவர்களுடன் இணைந்து செயல்பட நாமும் தயாராகவே உள்ளோம். இங்கே கொள்கைதான் முக்கியம் கொள்கைக்காக தற்போது பேரவையில் இணைந்து செயல்படுவதுபோல்  அரசியலிலும் எமது கோரிக்கைகளை ஏற்று கொள்கையின்பால்  இணைந்து செயல்படத்தயார்.

பேரவையில் உள்ளவர்கள் கூட்டமைப்பினை ஏற்கவில்லை எனவே தமிழர்களிற்கான தலமையினை மாற்றவேண்டும் அல்லது அதில் உள்ளவர்கள் வெளியில் வரவேண்டும். இதனை சிலர் இன்றுதான் விமர்சிக்கின்றனர். ஆனால் அன்று ஏற்றிருந்தனர்.இதேவேளை நாம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொள்கையோடு இருக்கும் வரையில் அவரை தலமையாக இருக்கவும் தயார்

இதேவேளை எதிர்வரும் மார்ச்மாதம் யு.என் அமர்வு இடம்பெறவுள்ள நிலமையில் இலங்கை அரசு மேலும் கால அவகாசம் கோருகின்றது. 2015 செம்டம்பரில் எடுக்கப்பட்ட தீர்மானமும் அரசியல் நிலமைக்காகவே எட்டப்பட்டதே அன்றி பாதிக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்து எடுக்கப்படவில்லை. அதாவது பூகோள அரசியல் நலன் சார்ந்து இலங்கையில் ஓர் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தவே அத் தீர்மானம் திறைவேற்றப்பட்டது. இதனையே கூட்டமைப்பும் ஏற்றது.

இதன் லிரகாரம் இடம்பெறுகின்ற விசாரணை ஓர் கலப்பு பொறிமுறையானது அல்ல. தனிய உள்ளக விசாரணை மட்டுமே .்இதற்கு சர்வதேச பங்களிப்பை ஏற்றனர் இருப்பினும் அதுவும் தற்போது ஏற்க மாட்டோம் என பகிரங்கமாகவே கூறுகின்றனர். கூட்டமைப்பின்பேச்சாளர் அண்மையில் ஜெனிவா சென்று இலங்கை அரசு கோரியுள்ள கால எல்லைக்கு இணங்கியுள்ளதாக தெரிகின்றது.

இந்த இணக்கம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பான முடிவு அல்ல. எனவே இந்த முடிவினை ஏற்கவில்லை என்ற தீர்மானத்தினை இங்குள்ள சிவில் சமூகங்களும் எடுக்க வேண்டும். இலங்கை தொடர்பான தீர்மாணத்தினை தொடர்ந்தும் வைத்திருப்பது தாம் விரும்பாத அரசு வந்தால் அதனை திணிப்பதற்காகவே வைத்திருக்கின்றனர்.

இதேநேரம் அடுத்த ஐ.நா அமர்விலும் ஆணையாளர் ஓர் அறிக்கை வெளியிடுவார் அது நிச்சயமாக காட்டமாகவே இருந்தாலும் அது தீர்மாணம் அல்ல. அங்கே முடிவுகளை எட்டுவது அங்கத்துவ நாடுகள்தான். இதனாலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் செயலாளர் இறுக்காமான நிலமையை அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளபோதிலும் கால நீடிப்புக்கு நாடிகளிடம் இணக்கத்தை தெரிவித்துள்ளார் என்றார்.

மூலக்கதை