உ.பி., தேர்தலில் பா.ஜ.,வின் வெற்றி உறுதி: வெங்கையா நாயுடு

தினமலர்  தினமலர்
உ.பி., தேர்தலில் பா.ஜ.,வின் வெற்றி உறுதி: வெங்கையா நாயுடு

புதுடில்லி: ‛உ.பி., சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வின் வெற்றி உறுதி' என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

வெற்றி உறுதி:


டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட அவர் தெரிவித்ததாவது: உ.பி., சட்டசபை தேர்தலில், பா.ஜ., தனிப் பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்காகவே, தேர்தலில் போட்டியிடுகின்றன. முதல்வர் அகிலேஷ் யாதவ், கழுதை போன்ற தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி, பிரசாரம் செய்வது, அவரது அரசியல் நாகரிகம் எப்படிப்பட்டது என்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை