டெபிட்கார்டு பயன்படுத்திய 10 லட்சம் பேருக்கு பரிசு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க 2 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் மின்னணு பரிவர்த்தனையை ஏற்கும் வியாபாரிகளுக்கு என இந்த திட்டங்களை கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி நிதி ஆயோக் அறிமுகம் செய்தது. இது வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை அமலில் இருக்கும். தேசிய பண பரிவர்த்தனை கழகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, சுமார் 9.8 லட்சம் பேருக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் 9.2 லட்சம் பேர் வாடிக்கையாளர்கள், 56,000 பேர் வியாபாரிகள். டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் பரிசுகளை அதிகம் அள்ளியுள்ளனர். பரிசு தொகையாக ₹153.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசு திட்டங்கள் ஏராளமான மக்கள் மின்னணு பரிவர்த்தனைக்கு மாற வழி வகுத்துள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த் கூறியுள்ளார்.

மூலக்கதை