மோடி, ரவிசங்கருடன் சத்ய நாதெள்ளா சந்திப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா, மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இணைந்து செயல்படுவது தொடர்பாக பல முறை ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை நேற்று சந்தித்து ஊரக பகுதிகளில் தொழில் நுட்பம், கல்வி போன்றவற்றை செயல்படுத்தும் மைக்ரோசாப்ட் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.நிதி ஆயோக் சார்பில் நேற்று நடந்த வட்ட மேசை மாநாட்டில் அவர் பங்கேற்றார். இதில், தரவுகள் பாதுகாப்பு, கிளவுட் கம்ப்யூட்டிங் தொடர்பாக மத்திய அரசின் மூத்த  அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு சத்ய நாதெள்ளா விளக்கம் அளித்தார் என நிதி  ஆயோக் ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது.இதுபோல், ஊரக பகுதிகளில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மேம்படுத்துவது, வேலை வாய்ப்பு இணையதள மேம்பாடு குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஊரக பகுதிகளில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மேம்படுத்தவும், சிறப்பாக செயல்படுத்தவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் சிறந்த பணியை ஆற்றி வருகிறது என ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடந்துள்ளது. சந்திப்பின்போது, எச்1பி விசா தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படவில்லை என சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார்

மூலக்கதை