ஜல்லிக்கட்டில் மிருகவதை 'பீட்டா' மீண்டும் சீண்டல்

தினமலர்  தினமலர்
ஜல்லிக்கட்டில் மிருகவதை பீட்டா மீண்டும் சீண்டல்

புதுடில்லி: சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது, அதிக அளவில் காளைகள் துன்புறுத்தப்பட்டதாக கூறியுள்ள, 'பீட்டா' அமைப்பு, இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் ஆதாரங்களை தாக்கல் செய்யப் போவதாக கூறியுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, தமிழகத்தில் தன் எழுச்சி போராட்டங்கள் நடந்தன.

இதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, தமிழக சட்டசபையில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அலங்காநல்லுார், பாலமேடு உள்ளிட்ட இடங்களில், சமீபத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன.

அதிக ஆதரவு



இந்நிலையில், 'பீட்டா' இந்தியா அமைப்பின் தலைவர், பூர்வா ஜோஷிபுரா, நேற்று கூறியுள்ளதாவது:சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில், அதிக அளவில் காளைகள் துன்புறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்த ஆதாரங்களை சேகரித்து, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யவுள்ளோம். எங்கள் அமைப்புக்கு, பிரபலங் கள் அதிக அளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மனு தாக்கல்



பீட்டா அமைப்பின் விலங்குகள் நல விவகார இயக்குனர் மணிலால் வல்லியதே கூறியதாவது:ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவுள்ளோம்.

இதுகுறித்து, எங்கள் வக்கீல்களிடம் ஆலோசித்து வருகிறோம். இன்னும் சில நாட்களில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை