'தொழில்நுட்பத்தை புகுத்த தவறினால் ஆபத்து'; வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
தொழில்நுட்பத்தை புகுத்த தவறினால் ஆபத்து; வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

மும்பை : ‛வங்கிகள் பாரம்பரிய நடைமுறையில் இருந்து, மின்னணு தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு மாற தவறினால் ஆபத்து' என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

ஆபத்து:


இதுகுறித்து ரிசர்வ் வங்கி துணை கவர்னர், எஸ்.எஸ்.முந்த்ரா கூறியதாவது: வங்கிகள், நவீன மின்னணு தொழில்நுட்பத்தை தழுவாமல், இன்னும், பாரம்பரிய நடைமுறையை பின்பற்றினால், அவை, வங்கி வர்த்தகத்தில் இருந்தே காணாமல் போகும் ஆபத்து உள்ளது. பல்வேறு தொழில்களில் உள்ள நிறுவனங்கள், தற்போது, 'சிறிய வங்கி, பேமன்ட் வங்கி' என, நிதிச் சேவையிலும் கால் பதித்து வருகின்றன.

மாறணும்:


நவீன தொழில்நுட்பத்தை பின்பற்றும் இத்தகைய நிறுவனங்களால், வங்கிகள் மேற்கொள்ளும் வங்கி நடைமுறைகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள், வரும், 2020ல், 20 சதவீதம் பாதிக்க வாய்ப்புள்ளதாக, ஆய்வொன்று தெரிவிக்கிறது. ஆகவே, அனைத்து வங்கிகளும், பாரம்பரிய நடைமுறையில் இருந்து, மின்னணு தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு மாற வேண்டும்.

அதே சமயம், நிதிச் சேவை நிறுவனங்களை போட்டியாக கருதாமல், அவற்றுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், வங்கிகள் சிறப்பாக வளர்ச்சி காண முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை