இந்தியா-ருவாண்டா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

தினகரன்  தினகரன்

கிகாலி: இந்தியா-ருவாண்டா இடையே விமான போக்குவரத்து உள்ளிட்ட 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி 5 நாள் சுற்றுப்பயணமாக ருவாண்டா மற்றும் உகண்டா நாடுகளுக்கு சென்றுள்ளார். ருவாண்டாவில் அந்நாட்டு அதிபர் பால் ககாமேவை நேற்று முன்தினம் ஹமீத் அன்சாரி சந்தித்து பேசினார். இதனைத்தொடர்ந்து இந்தியா-ருவாண்டா இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ருவாண்டாவில் இருந்து இந்தியாவிற்கு விமான போக்குவரத்து, விசா நடைமுறைகள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்பு தொடர்பான 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இது தொடர்பாக பேசிய ருவாண்டா பிரதமர் அனடாசேமுரேகேசி, “இந்தியா-ருவாண்டா இடையே பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்டவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் மேம்படும். கடந்த 54 ஆண்டுகளாக இந்தியா-ருவாண்டா இடையே நட்புறவு நீடிக்கின்றது. இருநாட்டுக்கும் இடையே உள்ள உறவு மேலும் வலுப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

மூலக்கதை