புதிய பிரி­வு­களில் கவனம்; நெஸ்லே நிறு­வனம் முடிவு

தினமலர்  தினமலர்
புதிய பிரி­வு­களில் கவனம்; நெஸ்லே நிறு­வனம் முடிவு

புது­டில்லி : நெஸ்லே நிறு­வனம், அடுத்­த­கட்­ட­மாக, பிரீ­மியம் காபி, செல்ல பிரா­ணிகள் பரா­ம­ரிப்­புக்­கான பொருட்கள் ஆகி­ய­வற்றின் விற்­ப­னையில் கவனம் செலுத்த உள்­ளது.
உணவுப் பொருட்கள் உள்­ளிட்ட, விரை­வாக விற்­ப­னை­யாகும் நுகர்­பொ­ருட்கள் துறையில், நெஸ்லே ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வ­னத்தின், மேகி நுாடுல்­சுக்கு வாடிக்­கை­யா­ளர்கள் அதிகம். அதில், நிர்­ண­யித்த அளவை விட, அதிக வேதி பொருள் இருப்­ப­தாகக் கூறி, மத்­திய உணவு பாது­காப்பு துறை, மேகி நுாடுல்ஸ் விற்­ப­னைக்கு தடை விதித்­தது. பின், நீதி­மன்ற உத்­த­ரவால், மேகி மீதான தடை விலக்கிக் கொள்­ளப்­பட்­டது. இந்­நி­லையில், பிரீ­மியம் காபி, செல்ல பிரா­ணிகள் பரா­ம­ரிப்பு, சரும பாது­காப்பு, தானி­யங்கள் உள்­ளிட்ட பிரி­வு­க­ளிலும் கவனம் செலுத்த முடிவு செய்­துள்­ளது.
இது குறித்து, நெஸ்லே இந்­தியா நிர்­வாக இயக்­குனர் சுரேஷ் நாரா­யணன் கூறி­ய­தா­வது: கடந்த ஆண்டில், எங்கள் நிறு­வ­னத்தின் நிகர விற்­பனை, 9,159 கோடி ரூபாய் என்­ற­அளவில் இருந்­தது. இது, நடப்­பாண்டில், 10 ஆயிரம் கோடி ரூபா­யாக அதி­க­ரிக்கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. கடந்த ஆறு மாதங்­களில், 35 பொருட்கள் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளன. தொடர்ந்து, புதிய பொருட்கள் அறி­முகம் செய்­யப்­படும்.இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை