பாக்கெட் தேயிலை தொழில்; மறு­சீ­ர­மைக்க எவ­ரெடி முடிவு

தினமலர்  தினமலர்
பாக்கெட் தேயிலை தொழில்; மறு­சீ­ர­மைக்க எவ­ரெடி முடிவு

கோல்­கட்டா : எவ­ரெடி நிறு­வனம், பாக்கெட் தேயிலை விற்­ப­னையை, மறு­சீ­ர­மைக்க முடிவு செய்­துள்­ளது.
இந்­தி­யாவில், பாக்கெட் தேயி­லையின் சந்தை மதிப்பு, 10 ஆயிரம் கோடி ரூபாய் என்­ற­ளவில் இருப்­ப­தாக, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. அதில், இந்­துஸ்தான் யூனி­லீவர், டாடா டீ ஆகி­யவை, அதிக பங்கை கொண்­டுள்­ளன. எவ­ரெடி நிறு­வனம், ‘டெஸ், ஜாகோ, பிரீ­மியம் கோல்ட்’ ஆகிய பெயர்­களில், பாக்­கெட்டில் அடைக்­கப்­பட்ட தேயி­லையை விற்­பனை செய்­கி­றது. இந்­நி­லையில், அந்­நி­று­வனம், தேயிலை விற்­ப­னையை மறு­சீ­ர­மைக்க முடிவு செய்­துள்­ளது.
இது குறித்து, அந்­நி­று­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: இந்­திய தேயிலை சந்­தையில், எங்கள் நிறு­வ­னத்தின் பங்கு, 1 முதல், 5 சத­வீதம் என்­ற­ளவில் உள்­ளது. கடந்த ஆண்டில், எங்கள் நிறு­வன விற்­பனை, 1,331 கோடி ரூபா­யாக இருந்­தது. வாடிக்­கை­யா­ளர்கள் விரும்பும் வகையில், தேயிலை விற்­ப­னையில் மாற்றம் செய்ய விரும்­பு­கிறோம். இதற்­காக, மறு­சீ­ர­மைப்பு பணி­களை துவக்க உள்ளோம். இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை