‘தொழில்­நுட்­பத்தை புகுத்த தவ­றினால் ஆபத்து’; வங்­கி­க­ளுக்கு ரிசர்வ் வங்கி எச்­ச­ரிக்கை

தினமலர்  தினமலர்
‘தொழில்­நுட்­பத்தை புகுத்த தவ­றினால் ஆபத்து’; வங்­கி­க­ளுக்கு ரிசர்வ் வங்கி எச்­ச­ரிக்கை

மும்பை : ரிசர்வ் வங்கி துணை கவர்னர், எஸ்.எஸ்.முந்த்ரா கூறி­ய­தா­வது: வங்­கிகள், நவீன மின்­னணு தொழில்­நுட்­பத்தை தழு­வாமல், இன்னும், பாரம்­ப­ரிய நடை­மு­றையை பின்­பற்­றினால், அவை, வங்கி வர்த்­த­கத்தில் இருந்தே காணாமல் போகும் ஆபத்து உள்­ளது. பல்­வேறு தொழில்­களில் உள்ள நிறு­வ­னங்கள், தற்­போது, ‘சிறிய வங்கி, பேமன்ட் வங்கி’ என, நிதிச் சேவை­யிலும் கால் பதித்து வரு­கின்­றன. நவீன தொழில்­நுட்­பத்தை பின்­பற்றும் இத்­த­கைய நிறு­வ­னங்­களால், வங்­கிகள் மேற்­கொள்ளும் வங்கி நடை­மு­றைகள் மற்றும் பணப் பரி­வர்த்­த­னைகள், வரும், 2020ல், 20 சத­வீதம் பாதிக்க வாய்ப்­புள்­ள­தாக, ஆய்­வொன்று தெரி­விக்­கி­றது.ஆகவே, அனைத்து வங்­கி­களும், பாரம்­ப­ரிய நடை­மு­றையில் இருந்து, மின்­னணு தொழில்­நுட்ப பயன்­பாட்­டிற்கு மாற வேண்டும். அதே சமயம், நிதிச் சேவை நிறு­வ­னங்­களை போட்­டி­யாக கரு­தாமல், அவற்­றுடன் இணைந்து செயல்­ப­டு­வதன் மூலம், வங்­கிகள் சிறப்­பாக வளர்ச்சி காண முடியும். இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை