‘டாடா குழும நிறு­வ­னங்கள் பின்தங்காமல் அனைத்து துறை­க­ளிலும் முதன்­மை­யாக விளங்கும்’

தினமலர்  தினமலர்
‘டாடா குழும நிறு­வ­னங்கள் பின்தங்காமல் அனைத்து துறை­க­ளிலும் முதன்­மை­யாக விளங்கும்’

மும்பை : டாடா சன்ஸ் புதிய தலை­வ­ராக, என்.சந்­தி­ர­சே­கரன் நேற்று பொறுப்­பேற்றுக் கொண்டார். மும்­பையில், டாடா குழு­மத்தின் தலைமை அலு­வ­ல­க­மான, பாம்பே ஹவுஸில், டாடா சன்ஸ் இயக்­குனர் குழு கூட்டம் நடை­பெற்­றது. இக்­கூட்­டத்­திற்கு தலைமை ஏற்ற பின், செய்­தி­யா­ளர்­க­ளிடம் சந்­தி­ர­சே­கரன் பேசி­ய­தா­வது: டாடா குழுமம், 10,300 கோடி டாலர் சொத்து மதிப்­புடன், உப்பு முதல், சாப்ட்வேர் வரை பல்­வேறு துறை­களில் ஈடு­பட்டு வரு­கி­றது. இக்­கு­ழு­மத்தின் தலைமை பொறுப்பு, எனக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளதை, மிகப் பெரிய மரி­யா­தை­யா­கவும், பெரு­மை­யா­கவும் கரு­து­கிறேன். அனை­வ­ரு­டனும் ஒன்­றி­ணைந்து செயல்­பட்டு, குழு­மத்தின் முன்­னேற்­றத்­திற்கு பாடு­ப­டுவேன். டாடா நிறு­வ­னங்கள் அனைத்தும், தத்­த­மது துறை­களில், பிற நிறு­வ­னங்­களை அடுத்து இல்­லாமல், முத­லி­டத்தில் நிற்கும். இவ்­வாறு அவர் கூறினார்.
இந்­தி­யாவில், ஐ.டி., துறையில், டாடா குழு­மத்தைச் சேர்ந்த, டி.சி.எஸ்., நிறு­வனம் முத­லி­டத்தில் உள்­ளது. இந்­நி­று­வ­னத்தில், 30 ஆண்­டு­க­ளாக சந்­தி­ர­சே­கரன் பணி­யாற்றி, அதன் சீரிய வளர்ச்­சிக்கு துணை புரிந்­துள்ளார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை