வரலாற்றில் முதல் முறையாக 153 ரூபாவை கடந்த டொலரின் பெறுமதி!

PARIS TAMIL  PARIS TAMIL
வரலாற்றில் முதல் முறையாக 153 ரூபாவை கடந்த டொலரின் பெறுமதி!

 அமெரிக்க டொலருக்கான சிறிலங்கா பண பரிமாற்றத்தில் அதிகமாக அதிகரிப்பொன்று இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

 
வரலாற்றில் முதல் முறையாக இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கான விற்பனை பெறுமதி 153 ரூபாவை கடந்துள்ளது.
 
அதற்கமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 149.68 ரூபாயாகவும், விற்பனை விலை 153.44 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. 
 
சிறிலங்கா மத்திய வங்கியினால் அறிவிக்கப்படும் தினசரி நாணய மாற்று வீதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளார்.
 
மேலும் வெளிநாட்டு நாணய மாற்று மையத்தில் இன்றையை தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 152.10 ரூபாயாகவும், விற்பனை விலை 154.00 ரூபாயாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதேவேளை, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 17ஆம் திகதிவரையிலான காலப்பகுதியினுள் அமெரிக்க டொலருக்கு எதிராக நூற்றுக்கு 0.6 வீதத்திலும், பிரித்தானி பவுண்டிற்கு எதிராக நூற்றுக்கு 2.4 வீதத்திலும், யூரோவுக்கு எதிராக நூற்றுக்கு 1.9 வீதத்திலும் ஜப்பான் யென்னிற்கு எதிராக நூற்றுக்கு 3.2 வீதத்திலும் இந்திய ரூபாய்க்கு எதிராக நூற்றுக்கு 1.9 வீதத்திலும் சிறிலங்கா ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலக்கதை