பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் துப்பாக்கி உரிமம் ரத்து

தினமலர்  தினமலர்
பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் துப்பாக்கி உரிமம் ரத்து

லாகூர்: பாக்., பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மற்றும் அவனுடைய கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்ட 44 துப்பாக்கி உரிமங்களை பாகிஸ்தான் அரசு ரத்து செய்தது.

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத். 2008 மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன்.

வீட்டு காவல்


இந்தியா, அமெரிக்கா உட்பட பல முக்கிய நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, பயங்கரவாதி ஹபீஸ் மற்றும் அவனது கூட்டாளிகள் 4 பேரை பாகிஸ்தான் அரசு கடந்த ஜன.,30 ம் தேதி லாகூரில் வீட்டு காவலில் வைத்தது. மேலும், ஹபீஸ் உட்பட 37 பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி உரிமம் ரத்து


இந்நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஹபீஸ் சயீத் மற்றும் அவனுடைய கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்ட 44 துப்பாக்கி உரிமங்களை பாகிஸ்தான் அரசு ரத்து செய்தது.

மூலக்கதை