பயங்கரவாதம்!! - சுற்றுலாத்துறைக்கு 1.3 பில்லியன் யூரோக்கள் இழப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
பயங்கரவாதம்!!  சுற்றுலாத்துறைக்கு 1.3 பில்லியன் யூரோக்கள் இழப்பு!!

கடந்த 2016 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறைக்கு 1.3 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த இழப்புக்கு பயங்கரவாதமே காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வழக்கமாக பரிஸ் உட்பட இல்-து-பிரான்சுக்குள் வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு  1.5 மில்லியன்களால் குறைந்துள்ளது என CRT இன் வருடாந்த கணக்கெடுப்புமூலம் தெரியவந்துள்ளது. இது கடந்த 2015 ஆம் ஆண்டைக்காட்டிலும் 4.7 வீதம் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் 21.5 வீதமும், ஜப்பானில் இருந்து 41.2 வீதமும் குறைந்துள்ளது. அமெரிக்க சுற்றுலாப்பயணிகளில் பெரிய அளவு தாக்கம் ஏற்படவில்லை என்றும்... 4.9 வீதம் மட்டுமே (ஒரு இலட்சம் பயணிகள்) சரிவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் பிரான்ஸ் சந்தித்திருந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கைதை தொடர்ந்தும் தக்கவைக்க பிரெஞ்சு சுற்றுலாத்துறை தொடர்ந்தும் போராடி வருகிறது.  ஆனால் அந்த ஆண்டுகளுக்கு பின்னர் எந்த வருடங்களிலும் அந்த தொகையை எட்டமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், தங்குமிடங்கள், நட்சத்திர விடுதிகள் போன்றவை கணிசமான வருவாயையும், பிரெஞ்சு சுற்றுலாத்துறை 1.3 பில்லியன் யூரோக்கள் வருவாயும் இழந்துள்ளமை (இல்-து-பிரான்சுக்குள் மட்டும்) குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை