நடிகை அமலாபால் - இயக்குனர் விஜய்க்கு விவாகரத்து வழங்கி குடும்பநல நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்

சென்னை: நடிகை அமலாபால் - இயக்குனர் விஜய் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருத்து வேறுபாட்டால் பிரிந்த இருவரும் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த சென்னை குடும்பநல நீதிமன்ற நீதிபதி தீபிகா விவாகரத்து வழங்கி தீர்ப்பு  அளித்த்துள்ளார். நடிகை அமலாபால் - இயக்குனர் விஜய் திருமணம் 2014 ஜூன் 12ம் தேதி சென்னையில் நடைபெற்றது. வீரசேகரன் என்ற படத்தில் அறிமுகமான அமலாபால் மைனா, தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய் இயக்கிய தலைவா, தெய்வத்திருமகள் படங்களில் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை