Yvelines - மர்மமான முறையில் காணாமல் போன இருவர்

PARIS TAMIL  PARIS TAMIL
Yvelines  மர்மமான முறையில் காணாமல் போன இருவர்

Yvelines மாவட்டத்தில் கடந்த ஒரே வாரத்தில் இருவர் மர்மமான முறையில் மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த ஒரே வாரத்தில் 23 வயதுடைய பெண் ஒருவரும் 24 வயதுடைய ஆண் ஒருவரும் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் கடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இருவரும் இறுதியாக பயன்படுத்திய பொருட்கள் சில வெவ்வேறு இடங்களில் கண்டெடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Montigny-le-Bretonneux பகுதியில் வசிக்கும் Mona Dumoulin-Minguet எனும் 23 வயது பெண் கடந்த 14 ஆம் திகதி காதலர் தினம் அன்று முதல் காணாமல் போயுள்ளார். குறித்த பெண்ணின் தொலைபேசி Rambouillet பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோன்று கடந்த சனிக்கிழமை Martin Isimat-Mirin எனும் 24 வயதுடைய நபர் காணாமல் போயுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  குறித்த நபரின் மகிழுந்து Poigny-la-Forêt எனும் பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி காணாமல் போன இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறியமுடிகிறது. 
 
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையினை மேற்கொண்டு வருகின்றார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. இருவரும் கடத்தப்பட்டிருக்க கூடும் என்கிற ரீதியில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
 

மூலக்கதை