விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை நோக்கி காத்திருக்கும் பெண்!

PARIS TAMIL  PARIS TAMIL
விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை நோக்கி காத்திருக்கும் பெண்!

 விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட 38 கிலோ எடை மட்டுமே கொண்ட இளம்பெண் தன் இறப்பை நோக்கி காத்திருக்கிறார்.

 
Claire Connolly (25) என்னும் இளம்பெண் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார், மூன்று வருடங்களுக்கு முன்னர் இவர் 114 கிலோ எடை இருந்துள்ளார்.
 
சந்தோஷமாக இருந்த அவர் வாழ்க்கையில் ஒரு பிரச்சனை வந்தது, அதாவது Gastroparesis என்னும் விசித்திர நோய் Claireஐ தாக்கியது.
 
அவர் சாப்பிடும் சாப்பாடு அவருக்கு ஜீரணமாகமல் இருந்து வந்தது, தொடர் வாந்தியும் அவர் எடுத்து வந்தார், இதனால் திடீரென அவர் 30 கிலோ எடை குறைந்தார்.
 
பின்னர் அவர் என்ன சாப்பிட்டாலும் அவர் வயிற்றில் அது தங்காமலும், ஜீரணமாகலும் இருந்து வந்தது.
 
இதன் காரணமாக தற்போது அவர் 38 கிலோ தான் உள்ளார், மருத்துவர்களால் Claireஐ குணமாக்க முடியவில்லை.
 
தற்போது எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் Claire தான் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என உணர்ந்து விட்டார்.
 
இதையடுத்து, தன் இறுதி ஊர்வலம் பற்றியும், அதில் தன் பெற்றோர் அணிய வேண்டிய உடைகளை பற்றியும் இப்போதே அவர்களிடம் கூறிவிட்டார்.
 
Claire Connolly எந்த நாட்டில் வசித்து வருகிறார் என்ற விபரம் தெரியவில்லை.
 
 

மூலக்கதை