டோனி நீக்கம்; அசார் கோபம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டோனி நீக்கம்; அசார் கோபம்

புனே: ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் டோனி. அணி நிர்வாகம் சமீபத்தில் அவரை நீக்கி விட்டு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித்தை புதிய கேப்டனாக நியமித்தது.

இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘இந்த முடிவும், கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்கிய விதமும் மூன்றாந்தரமாக உள்ளது.

இது அவமானகரமானது. அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்த 8-9 ஆண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்தையும் வென்று விட்டார்’ என்றார்.


 கடந்த 2016ம் ஆண்டு ஐபிஎல் தொடரில்தான் புனே அணி முதன் முறையாக விளையாடியது.

அப்போது அந்த அணியால் 7வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

இது குறித்து அசாருதீன் கூறுகையில், ‘அணி நன்றாக விளையாடாதபோது, கேப்டனால் மட்டும் என்ன செய்ய முடியும்? டோனி நல்ல கேப்டனாக இல்லாமல்தான் 2 ஐபிஎல் பட்டங்களை (சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக) வென்றாரா? கேப்டனை மாற்ற வேண்டும் என அணி நிர்வாகம் விரும்பினால், டோனியிடம் சென்று பதவியில் இருந்து விலகி விடுங்கள் என கூறியிருக்க வேண்டும். பின்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகியது அவரது சொந்த முடிவு என இந்த உலகிற்கு கூறியிருக்க வேண்டும்’ என்றார்.

எனினும் சாதாரண வீரராக டோனி அணியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை