முன்னாள் காதலியின் மன்னிப்பு கடிதத்தில் உள்ள பிழைகளை டிவிட்டரில் பதிவிட்ட காதலன்

தினகரன்  தினகரன்

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஸ்டெட்ஸன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் நிக் லுட்ஸ் என்ற மாணவருக்கு அவரது முன்னாள் காதலி மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தான் பிரிந்து சென்ற நிலை குறித்து விரிவாக எழுதியுள்ளார். ஆனால் நிக் அந்த மன்னிப்பு கடிதத்தில் பிழை கண்டு பிடிக்க தொடங்கியுள்ளார். எந்தெந்த இடங்களில் வார்த்தை பிழை உள்ளதோ அந்த இடங்களில் சிவப்பு பேனா கொண்டு கோட்டிட்டு காட்டியுள்ளார். அதில் அவரது காதலி நீண்ட சுயவிவரம் தெரிவித்துள்ளதாகவும், சொன்ன கருத்தையே மீண்டும் சொல்லியிருப்பதாகவும் நிக் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் நிக்கை ஏமாற்றியதாக அவரது முன்னாள் காதலி குறிப்பிடவில்லை. மேலும் இந்த கடிதத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னாள் காதலி தவறாக கடிதம் எழுதினால் மதிப்பெண் போட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிடுங்கள் என்று நிக் தெரிவித்துள்ளார்.   100 க்கு 61 மதிப்பெண்கள் அவர் தனது முன்னாள் காதலியின் கடிதத்திற்கு வழங்கியுள்ளார். அந்த கடிதத்திற்கு டி தரவரிசை வழங்கியுள்ளார். நிக் தனது சொந்த விஷத்தை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் என்னதான் முன்னாள் காதலி தவறாக எழுதி இருந்தாலும் தனிமனி  இரகசியத் தை அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது கண்டிக்க தக்க செயல் என்று கருத்து  தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை