பார்வையற்றோர் டி.20 கிரிக்கெட் சாம்பியனான இந்திய அணிக்கு, மத்திய அரசு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த இந்திய அணி வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் மத்திய அரசு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு வீரர்களுக்கும் தனியாக ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெங்களூருவில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைபற்றியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை