திருமணத்துக்கு முன்பும் சேர்ந்து வாழலாம் - சமந்தா காட்டும் உதாரணம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருமணத்துக்கு முன்பும் சேர்ந்து வாழலாம்  சமந்தா காட்டும் உதாரணம்

திருமணத்துக்கு முன்பு ‘லிவிங் டு கெதர்’ பாணியில் வாழும் வாழ்க்கை சினிமாவுலகில் சகஜமாகி வருகிறது. நட்சத்திர காதல் ஜோடிகள்தான் பெரும்பாலும் இந்த வாழ்க்கை முறையை மேற்கொள்கின்றனர்.

அதேசமயம் இவைகளில் பல பிரேக் அப்பில்தான் முடிகிறது. கண்ணுக்கு தெரிந்து ஒரு நட்சத்திர ஜோடி வாழ்க்கையில் இணைய உள்ளது என்றால் அவர்கள் நாக சைதன்யா, சமந்தாவை குறிப்பிடலாம்.

ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி பிறகு ‘லிவிங் டு கெதர்’ பாணியில் தனி வீட்டில் வசிக்கத் தொடங்கினர். குடும்பத்தினருக்கு காதல் விஷயத்தை தெரிவித்து அவர்கள் சம்மதத்துடன் திருமணத்துக்கும் ஓ. கே வாங்கியிருக்கின்றனர்.



சமீபத்தில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. திருமண தேதி முடிவாகாத நிலையில் இந்த ஜோடி ‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கையை தொடர்கிறது.

ஞாயிற்றுகிழமை என்றால் இருவரும் வீட்டில் ஒன்றாக இருப்பது என்று வாய்மொழியாக உறுதி எடுத்துக்கொண்டு அதன்படி பொழுதை கழிக்கின்றனர். ஹாயாக நாக சைதன்யா சேரில் உட்கார்ந்திருக்க புல்தரை மீது அமர்ந்திருக்கும் சமந்தா தனது செல்ல நாய்க்குட்டியை கொஞ்சி விளையாடும் இதமான காட்சியை இணைய தள பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார்.

வெளியே இவர்களது காதல் பற்றி பரபரப்பாக பேசப்பட்டாலும் அமைதியாகவே எங்களின் பொழுது கழிகிறது என்பதை இதன் மூலம் விளக்கியிருக்கிறார் சமந்தா.

.

மூலக்கதை