103 வயது இயக்குனர் காலமானார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
103 வயது இயக்குனர் காலமானார்

தமிழில் தியாகராஜ பாகவதர் நடித்த சிவகாமி, பி. யூ. சின்னப்பா, டிஆர்.

மகாலிங்கம் நடித்த தயாளன் படங்களை இயக்கியதுடன் மலையாளம், சிங்கள மொழி படம் இயக்கியவர் ஆண்டனி மித்ரதாஸ். இவருக்கு வயது 103.

அண்ணநகரில் வசித்து வந்தார். அடுத்து ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வைத்து முதல் உலகப்போர் பற்றிய படம் இயக்கவுள்ளதாக 2 ஆண்டுகளுக்கு முன் அறிவித்தார்.

கடந்த 17ம் தேதி வீட்டில் கட்டிலில் படுத்திருந்தவர் தவறி விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்தது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.



ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணி அளவில் திடீரென்று காலமானார்.

தனது உடலை தானம் அளிப்பதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார. இதையடுத்து ராமசந்திரா மருத்துவமனைக்கு உடல் தானம் செய்யப்பட்டது.

கண்தானமும் செய்ய சம்மதித்திருந்ததால் லயன்ஸ் கிளப் அமைப்புக்கு கண்தானம் செய்யப்பட்டது. இவரது மனைவி எலிசெபத், மகள் உஷாவுக்கு குடும்பத்தினர், திரையுலகினர் ஆறுதல் கூறினர்.

1913ம் ஆண்டு பிறந்தவர் மித்ரதாஸ்.

இவரது தந்தை அருளானந்தம் முதல் உலகப்போரில் பங்குபெற்றவர்.

.

மூலக்கதை