ஆஸ்திரேலியாவில் விமான விபத்து: வணிக வளாகத்தில் மோதியதால் விமானத்தில் பயணித்த 5 பேரும் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம், வணிக வளாகம் ஒன்றில் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் எசன்டன் விமான நிலையத்திலிருந்து இன்று காலை 3 பேரை ஏற்றிக்கொண்டு சிறிய ரக தனியார் விமானம் ஒன்று கிம் தீவுக்கு புறப்பட்டது. விமானியும், துணை விமானியும் விமானத்தை இயக்கினர். தரையிலிருந்து வானத்தில் எழும்பிய சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்த விமானம், வணிக வளாகம் ஒன்றில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாக விக்டோரிய மாகான காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விமானம் மோதியதற்கான காரணம் குறித்து தனியார் நிறுவனம் விசாரணை செய்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் விமான இன்ஜினில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை