பயங்கரவாதி ஹபீசால் அச்சுறுத்தல்: பாக்., ஒப்புதல்

தினமலர்  தினமலர்
பயங்கரவாதி ஹபீசால் அச்சுறுத்தல்: பாக்., ஒப்புதல்

பெர்லின்: வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தால் பெரிய அச்சுறுத்தல் உள்ளதாக, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா தெரிவித்துள்ளார்.

நிராகரிப்பு:

இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வந்தார். அவர் மீது இந்தியா சார்பில் பல ஆதாரங்கள் அளிக்கப்பட்டும், பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்ததில்லை. ஆதாரங்கள் போதவில்லை எனக்கூறி பாகிஸ்தான் தட்டிக்கழித்து வந்தது. ஹபீசுக்கு தடை விதிக்க வலியுறுத்தி ஐ.நா.,வில் இந்தியா சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், சீனா இதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது. இந்நிலையில், ஹபீஸ் சயீத்தை அந்நாட்டு அரசு கைது செய்து வீட்டு சிறையில் வைத்துள்ளது.

நாட்டு நலன்:

இந்த சூழ்நிலையில், ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த பயங்கரவாத தடுப்பு தொடர்பான கூட்டத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப், ஹபீஸ் சயீத், சமூகத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளார். நாட்டின் நலன் கருதி ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என அவர் பேசியதாக பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலக்கதை