இதுக்கும் லைக்ஸ்தான் கணக்கு எடுக்கணுமா சூர்யா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இதுக்கும் லைக்ஸ்தான் கணக்கு எடுக்கணுமா சூர்யா?

ட்விட்டர் ட்ரெண்டிங், யூட்யுப் லைக்ஸ், வியூஸ் போன்றவை சினிமாக்காரர்களை படுத்தும் பாடு இருக்கிறதே... அப்பப்பா... இவற்றுக்கும் படத்தின் வசூலுக்கோ வெற்றிக்கோ தொடர்பே கிடையாது என்பது சினிமாக்காரர்களுக்கு புரிவதில்லை. விளைவு ட்விட்டர் ஜர்னலிஸ்ட் என்று புதிதாக ஒரு குரூப்பே கிளம்பி விட்டது.

இந்த யூட்யுப் கணக்கில் முதலில் பல்பு வாங்கியது தனுஷ். கொலவெறி பாடல் உலக லெவலில் ரீச் ஆனாலும் படம் படு ஃப்ளாப் ஆனது. அடுத்து சூர்யா. அஞ்சான் படத்தின் டீசர் 10 லட்சம் பார்வையாளர்களை சென்று சேர்ந்தது என்று கணக்கெடுத்து அதை சக்சஸ் மீட்டாகக் கொண்டாடினார்கள். படத்தின் ரிசல்ட் எல்லோருக்கும் தெரியும்.

இப்போதைய செய்திக்கு வருவோம். சில நாட்களுக்கு முன்பு குறும்பட இயக்குநர்களுக்காக ஒரு போட்டியை அறிவித்தார் சூர்யா. இந்தப் போட்டிக்கு அனுப்பப்படும் குறும்படங்களில் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு முதல் மூன்று இடங்களை பிடிப்பவை சூர்யாவின் கம்பெனி வெளியிடும் படங்களின் போது திரையிடப்படும். பணப் பரிசோடு சூர்யா கம்பெனியில் கதை சொல்லும் வாய்ப்பும் வழங்கப்படும் என்றார்கள்.

இந்த போட்டிக்கு குவிந்த படங்களில் சிலவற்றைத் தேர்வு செய்து அவர்களது வலைத்தளத்தில் ஏற்றியிருக்கிறார்கள். இவற்றில் இருந்து தேர்வு செய்வது பார்வையாளர்களின் லைக்ஸை பொறுத்துதானாம். எந்தப் படம் அதிக லைக்ஸ் வாங்குகிறதோ அந்த படம்தான் சிறந்ததாக தேர்வு செய்யப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இன்றைய சூழலில் வெளிநாடுகளில் நண்பர்கள் இருப்பவர்கள் மூலமாகவோ சில குறுக்கு வழி புரமோஷன்கள் மூலமாகவோ லைக்ஸ் வாங்க வைப்பது எளிது. எனவே இந்த முறையை கைவிட்டுவிட்டு மூத்த இயக்குநர்கள், கலைஞர்களால் தேர்வு செய்யப்படுவதே நல்ல தேர்வாக இருக்கும் என்கிறார்கள் குறும்பட ஆர்வலர்கள்.

இந்த செய்தி சூர்யா காதுகளுக்கு எட்டுமா?

மூலக்கதை