பிரான்சில் ஆபாச தளங்களுக்கு தடை??

PARIS TAMIL  PARIS TAMIL
பிரான்சில் ஆபாச தளங்களுக்கு தடை??

குடும்ப மற்றும் பெண்கள், குழந்தைகள் உரிமைக்கான அமைச்சர் Laurence Rossignol தெரிவித்த கருத்து ஒன்று பெரும் விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.
 
'நாங்கள் கட்டாயம் ஆபாச இணையத்தளங்களுக்கு எதிராக போராட வேண்டும்!' என அவர் தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கும் போது, பிரான்சில் ஆபாச இணைத்தளங்களுக்கு எதிராக போராடவேண்டும். மிக முக்கியமாக சிறுவர்கள் ஆபாச இணையத்தளங்களை பார்வையிட முடியாதவாறு தடை செய்யப்படவேண்டும். ஆபாச காணொளிகளும் ஒரு வகையில் பெண்களுக்கு எதிரான வன்முறை தான். மேலும் அதில் நடிப்பவர்களும் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுபவர்கள் தான். சிறுவர்கள் ஆபாச காணொளிகளை காண்பதும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை தான் என Laurence Rossignol குறிப்பிட்ட்டுள்ளார். 
 
மேலும் இது குறித்து தெளிவுபடுத்தும் போது, 'இது மிக சிக்கலான மற்றும் கடினமான விடயம். இணையத்தள சுதந்திரத்துக்கு எதிரானது. எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு முற்றிலும் எதிரானது, மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவற்றுக்கு முகம்கொடுக்கவேண்டி வரும். பிரான்சுக்கு வெளியே இயங்கும் நிறைய தளங்கள் உள்ளன. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை!' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை