மும்பை மாநகராட்சி யாருக்கு?

தினமலர்  தினமலர்
மும்பை மாநகராட்சி யாருக்கு?

மும்பை: மகாராஷ்டிராவில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மும்பை, நாக்பூர், தானே, புனே,நாசிக் உள்ளிட்ட 10 மாநகராட்சிகளுக்கும், 11 ஜில்லா பரிஷத், 118 பஞ்சாயத் சமிதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. 17,331 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3.77 கோடி வாக்காளர் ஓட்டு போட உள்ளனர். 40 ஆயிரம் பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2.76 லட்சம் அரசு அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எதிராக...:

மும்பை மாநகராட்சியை கடந்த பல வருடங்களாக பா.ஜ.,வுடன் இணைந்து சிவசேனா ஆட்சி செய்து வந்தது. தற்போது, இரு கட்சிகளும் எதிர்த்து களமிறங்கியுள்ளன. இதனால் மும்பை மாநகராட்சியை யார் கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

மூலக்கதை