18 வயது வீரருக்கு ரூ.4 கோடி

தினகரன்  தினகரன்

ஆப்கானிஸ்தானை சேர்ந்த 18 வயது சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் அர்மான் ரூ4 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ஐபிஎல் ஏலத்தில் ஆப்கன். வீரர்கள் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வீரருக்கு ரூ3 கோடி: இந்திய வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் தங்கராசு நடராஜன் (25 வயது), கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ரூ 3 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை ரூ10 லட்சம் மட்டுமே. கவுதம், அனிகேத் சவுத்ரி, கரண் ஷர்மா, முருகன் அஷ்வின் ஆகியோரும் நல்ல தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.விலை போகாதவர்கள்: முன்னணி ஆல்-ரவுண்டர் இர்பான் பதானின் அடிப்படை விலை ரூ 50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், இவரை எந்த அணியுமே ஏலம் எடுக்க முன்வரவில்லை. இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் விலைபோகவில்லை (அடிப்படை விலை: ₹2 கோடி). பிரபல வெளிநாட்டு வீரர்கள் இம்ரான் தாஹிர் (தெ.ஆ.), ராஸ் டெய்லர் (நியூசி.), ஜானி பேர்ஸ்டோ, அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கி.), தினேஷ் சண்டிமால் (இலங்கை), மார்லன் சாமுவேல்ஸ், ஜேசன் ஹோல்டர் (வெ.இ.), மெகதி ஹசன் மிராஸ் (வங்கதேசம்) உள்பட பலர் புறக்கணிக்கப்பட்டனர்.

மூலக்கதை