இந்தியாவிடம் இருந்து பாடம் கற்கவேண்டும் என்று கூறவில்லை: பாக். ராணுவ தளபதி மறுப்பு

தினகரன்  தினகரன்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ராவல்பிண்டியில் கடந்த டிசம்பர் மாதம் மூத்த ராணுவ அதிகாரிகளுக்கான கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஜாவித் பஜ்வா கலந்து கொண்டார். இந்நிலையில் ராவல்பிண்டி கூட்டத்தில் பேசிய பஜ்வா, இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியதாக கடந்த 12ம் தேதி பத்திரிகைகளில் செய்தி வெளியானது. கூட்டத்தில் பேசிய ராணுவ தளபதி பஜ்வா, “ஸ்டீவன் வில்கின்சன் எழுதிய “தி மிலிட்டரி அண்ட் இண்டியன் டெமாக்ரசி சின்ஸ் இண்டிபென்டன்ஸ்” என்று புத்தகத்தை படியுங்கள். இந்த புத்தகத்தில் இந்திய ராணுவத்தின் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், தேர்வு முறை உள்ளிட்டவை குறித்து தகவல் இடம்பெற்றுள்ளன” என்று கூறியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.  இதுதொடர்பாக தளபதி சார்பில், ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர், ‘‘ராணுவ தளபதி பஜ்வா இதுபோன்ற கருத்து கூறவில்லை’’ என விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை