ஆப்கனுடன் சண்டைக்கு தயாராகிறது பாகிஸ்தான்? எல்லையில் படைகள் குவிப்பு

தினகரன்  தினகரன்

இஸ்லாமாபாத்: ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் படை குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு நிலவுகிறது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் செவான் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த 16ம் தேதி, தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 88 பேர் பலியாயினர். 200 பேர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். இதில், 130 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 350க்கும் மேற்பட்டோர் கைதாகினர். இவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள். இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம், பீரங்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் ஆப்கன் எல்லையை நோக்கி முன்னேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பார் மேஜர் ஜெனரல் ஆசிப் கபோர் கூறுகையில், ‘‘ராணுவ தளபதி காமர் ஜாவேத் பஜ்வா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த தளபதி பஜ்வா உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.ப்ளஸ்: குட்டி நாடாக இருந்தாலும், ஆப்கனில் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அந்நாட்டின் தென்கிழக்கில் தங்கம், வெள்ளி, துத்தநாகம் உள்ளிட்டவையும், வடகிழக்கில், வைரங்கள், ரத்தினங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள் புதைந்து கிடப்பதும், வடக்குப்பகுதியில் பெட்ரோல், இயற்கை எரிவாயு ஏராளமான அளவு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மூலக்கதை