லாயிட் நுகர்வோர் சாத­னங்கள் பிரிவை ஹேவல்ஸ் நிறு­வனம் கைய­கப்­ப­டுத்­து­கி­றது

தினமலர்  தினமலர்
லாயிட் நுகர்வோர் சாத­னங்கள் பிரிவை ஹேவல்ஸ் நிறு­வனம் கைய­கப்­ப­டுத்­து­கி­றது

புது­டில்லி : மின் சாத­னங்கள் துறையில் ஈடு­பட்டு வரும், ஹேவல்ஸ் நிறு­வனம், லாயிட் எலக்ட்ரிக் அண்ட் இன்­ஜி­னி­யரிங் குழு­மத்தின், நுகர்வோர் சாத­னங்கள் பிரிவை கைய­கப்­ப­டுத்த உள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்தின் இந்­திய பிரிவின் நிர்­வாக இயக்­குனர் அனில் ராய் குப்தா கூறி­ய­தா­வது: நிறு­வ­னத்தின் இயக்­குனர் குழு, லாயிட் குழு­மத்தின் நுகர்வோர் சாத­னங்கள் பிரிவை, 1,600 கோடி ரூபாயில் கைய­கப்­ப­டுத்த ஒப்­புதல் வழங்­கி­உள்­ளது. இதன் மூலம், ஹேவல்ஸ் தயா­ரிப்­புகள், அனைத்து இல்­லங்­க­ளிலும் பர­வ­லாக அதி­க­ரிக்கும். இந்த நட­வ­டிக்கை, அடுத்த இரு மாதங்­களில் முடியும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்த ஒப்­பந்­தத்தின் மூலம், நுகர்வோர் சாத­னங்கள் பிரிவில், ஹேவல்ஸ் சிறப்­பான வளர்ச்சி காணும்.இவ்­வாறு அவர் கூறினார்.
லாயிட் எலக்ட்ரிக் அண்ட் இன்­ஜி­னி­யரிங் குழு­மத்தின், நுகர்வோர் சாத­னங்கள் பிரிவு, ‘டிவி, வாஷிங் மிஷின், ஏர்­கன்­டி­ஷனர்’ உள்­ளிட்ட, வீட்டு உப­யோக சாத­னங்­களை விற்­பனை செய்து வரு­கி­றது. இப்­பி­ரிவை கைய­கப்­ப­டுத்­து­வதன் மூலம், ஹேவல்ஸ் நிறு­வ­னத்தின் கீழ், லாயிட் தயா­ரிப்­புகள் அனைத்தும் விற்­பனை செய்­யப்­படும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை