சிறு கடன்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம்; பந்தன் பேங்க் அறி­விப்பு

தினமலர்  தினமலர்
சிறு கடன்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம்; பந்தன் பேங்க் அறி­விப்பு

புது­டில்லி : பந்தன் பேங்க், சிறு கடன்­க­ளுக்கு தொடர்ந்து முக்­கி­யத்­துவம் வழங்க முடிவு செய்­து உள்­ளது.
இது குறித்து, அந்த வங்­கியின் நிறு­வனர் சந்­தி­ர­ஷேகர் கோஷ் கூறி­ய­தா­வது: எங்கள் வங்கி, வாடிக்­கை­யா­ளர்­க­ளிடம் இருந்து, இது­வரை, 19 ஆயி­ரத்து, 800 கோடி ரூபாயை, ‘டிபா­சிட்’­டாக திரட்­டி­யுள்­ளது. வங்கி வழங்­கிய கடன்கள் அளவு, 20 ஆயி­ரத்து, 200 கோடி ரூபாய் என்­ற­ளவில் உள்­ளது. ஆண்­டு­தோறும், வங்­கியின் வளர்ச்சி, 30 – 40 சத­வீதம் அதி­க­ரித்து வரு­கி­றது. தற்­போது, 23 ஆயி­ரத்து, 300 ஊழி­யர்கள் பணி­பு­ரியும் நிலையில், கூடு­த­லாக, 200 பேர் வேலைக்கு தேர்வு செய்­யப்­பட உள்­ளனர். புதி­தாக தொழில் துவங்­குவோர், விரி­வாக்க நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுவோர், வீடு வாங்க விரும்­பு­வோ­ருக்கு, கடன் வழங்க வங்கி தயா­ராக உள்­ளது. தற்­போது வழங்கும் மொத்த கடனில், சிறு கடன்­களின் பங்கு, 91 சத­வீ­த­மாக உள்­ளது.
சிறிய அளவில் கடன் வாங்க விரும்­பு­வோ­ருக்கு, தொடர்ந்து முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­படும். செல்­லாத நோட்டு அறி­விப்பு வெளி­யான போது, கடும் சவா­லாக இருந்­தது. தற்­போது, பணப்­பு­ழக்கம் இயல்பு நிலைக்கு திரும்­பி­யுள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை