‘அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­களால் நாட்டின் உருக்கு உற்­பத்தி அதி­க­ரிக்கும்’

தினமலர்  தினமலர்
‘அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­களால் நாட்டின் உருக்கு உற்­பத்தி அதி­க­ரிக்கும்’

மும்பை : தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘கேர் ரேட்டிங்’ வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: மத்­திய அரசு, 2017 – 18ம் நிதி­யாண்டு பட்­ஜெட்டில், அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீட்டை கணி­ச­மாக அதி­க­ரித்­து ­உள்­ளது. இதன் கார­ண­மாக, வரும் நிதி­யாண்டில், உருக்கு தேவை, உற்­பத்தி, பயன்­பாடு ஆகி­யவை அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
கடந்த, 2014 – 15ம் நிதி­யாண்டில், இந்­தியா, உருக்கு உற்­பத்­தியில், அமெ­ரிக்­காவை பின்­னுக்கு தள்ளி விட்டு, 8.89 கோடி டன்­னுடன், உல­க­ளவில், மூன்­றா­வது இடத்­திற்கு முன்­னே­றி­யது. அடுத்து, 2015 – 16ல், 8.97 கோடி டன் உருக்கு உற்­பத்­தி­யா­னது. நடப்பு நிதி­யாண்டில், ஏப்., – டிச., வரை, இந்­தி­யாவின் உருக்கு உற்­பத்தி, 8.8 சத­வீதம் அதி­க­ரித்து, 7.23 கோடி டன்­னாக உயர்ந்­துள்­ளது. இதற்கு, முன்­னணி நிறு­வ­னங்கள் மேற்­கொண்ட, அதி­கப்­ப­டி­யான உருக்கு உற்­பத்தி துணை புரிந்­துள்­ளது. வரும் நிதி­யாண்டில், உருக்கு உற்­பத்தி, தேவை, பயன்­பாடு மேலும் அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை