சட்டவிரோரமாக ஆட்களைக் கடத்தியவர் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
சட்டவிரோரமாக ஆட்களைக் கடத்தியவர் கைது!!

சட்டவிரோதமாக பிரான்சுக்கும், பிரான்சில் இருந்து பிற நாடுகளுக்கும் ஆட்கடத்தல் வேலைகள் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
பிரான்சில் இருந்து வேறு நாடுகளுக்கும், வேறு நாடுகளில் இருந்து பிரான்சுக்கும் சட்டவிரோதமாக ஆட்கடத்தல் செய்துவந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Pas-de-Calais பகுதியில் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வாடகை மகிழுந்து சாரதி (Taxi) போர்வையில் இவர் இருந்ததாகவும், மிகப்பெரிய ஆட்கடத்தல் வலையமைப்பில் இரகசியமாக இதை செய்துவந்துள்ளதாகவும் காவல்துறையினரிடம் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே அமைப்பைச் சேர்ந்த முக்கிய ஆட்கடத்தல் காரர் ஒருவர் கடந்த மாதம் போலாந்து நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெஜ்லியத்திலும் மேற்படி வாடகை வாகன சாரதி ஆட்கடத்தல் வேலையை செய்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
முதல்கட்ட விசாரணைகளில் 'தன்மீது எந்த குற்றமும் இல்லை. நான் சாரதியாக பணி புரிகிறேன். ஒரு இடத்தில் இருந்து மறு இடத்துக்கு நான் வாகனம் ஓட்டிச் செல்கிறேன். அதுமட்டுமே என் தொழில். வாடிக்கையாளர் குறித்து எதுவும் தெரியாது!' என தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது. ஆனால் காவல்துறையினர் வசம் போதிய ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுள்ளது. விசாரணைகள் தொடர்கின்றன.

மூலக்கதை