சேலம் முதல் பஞ்சாப் அணி வரை.... தமிழக வீரர் நடராஜன் பற்றிய தகவல்கள்

தினகரன்  தினகரன்

சேலம்: தமிழக வீரர் நடராஜன் ஐ.பி.எல். ஏலத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்காக ரூ.3 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு இடது கை வேகபந்து வீச்சாளர் ஆவார். நடராஜன் சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னம்பட்டியை சேர்ந்தவர் ஆவார். இவரது முழுப்பெயர் தங்கராசு நடராஜன் ஆகும். தமிழக அணி 2011 - 12 ரஞ்சியில் சாம்பியன் பட்டம் வென்ற போது டென்னிஸ் பந்து வீச்சில் சிறந்து விளங்கினார். ஆனால் அப்போது கிரிக்கெட் பந்து வீச தெரியாது. இந்த நிலையில் அவர் சென்னை வந்து தமிழ்நாடு லீகில் ஜாலி ரோவர்ஸ், விஜய் சிசி ஆகிய அணிகளுக்கு ஆடினார். நடராஜன் குறுகிய காலத்தில் முதல் தர போட்டிகளுக்கு தேர்வானார். 2015 - 16 பெங்கால் அணிக்கு எதிராக அறிமுகமானார். மேலும் தமிழ்நாடு பிரிமியர் லீக் டி 20 தொடரில் திண்டுக்கல் அணிக்காக விளையாடினார். திண்டுக்கல் அணியில் விளையாடிய எல்.பாலாஜி அவரது பந்துவீச்சுக்கு கூடுதல் பலம் அளித்தார். தற்போது அவர் பஞ்சாப் அணிக்கு தேர்வாகியுள்ளது அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மூலக்கதை