Place de la République இல் கூடிய இளைஞர்கள்! - ஊழலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
Place de la République இல் கூடிய இளைஞர்கள்!  ஊழலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசின் Place de la République சில ஆயிரம் இளைஞர்கள் ஒன்று கூடி, ஊழலுக்கு எதிரான தங்கள் கண்டணங்களை வெளியிட்டனர். 
 
ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு, தன்னிச்சையாக இந்த இளைஞர்கள் கூடியுள்ளனர். கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியல் தலைவர்களுக்கு எதிராக பல கண்டணங்களையும், கோஷங்களையும் எழுப்பினார்கள். ஜனாதிபதி வேட்பாளர் Francois Fillonக்கு எதிராகவும் பல கோஷங்கள் எழுப்பட்டன. குறிப்பாக Francois Fillonக்கு எதிராக பல வாசகங்கள் தாங்கிய பதாகைகள் வைத்தும், கோஷங்களையும் எழுப்பினர். 
 
எந்த அரசியல் சாயமும் இல்லாமல், இளைஞர்கள் தன்னிச்சையாக கூடியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்கள் 2000 இல் இருந்து 3000 வரை கூடியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை