ரகசிய காதலனை மணக்க கங்கனா முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரகசிய காதலனை மணக்க கங்கனா முடிவு

தமிழில் தாம் தூம் என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்தவர் கங்கனா ரனாவத். தற்போது இந்தியில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதுடன் அடிக்கடி சர்ச்சைக்களிலும் சிக்குகிறார்.

நடிகர் ஹிருத்திக் ரோஷனும், கங்கனாவும் மாஜி காதல் ஜோடிகள். இவர்களுக்குள் சமீபத்தில் மோதல் ஏற்பட்ட விவகாரம் போலீஸ் வரை சென்றது.

தற்போது பழைய காதலை மறந்துவிட்டு புது காதலனை கண்டுபிடித்திருக்கிறார் கங்கனா. அவரை விரைவில் திருமணம் செய்யவும் முடிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து கங்கனா கூறியது: 20 வயதுக்கு முன்பு எதற்காக எல்லோரும் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று வியப்பாக எண்ணிப்பார்ப்பேன்.

20 வயதுக்கு பிறகு அந்த எண்ணம் மாறி மாறுபட்ட சிந்தனைகள் பிறந்தது.

உடனிருந்து தன்னை பார்த்துக்கொள்ளும் ஒரு பார்ட்னர் கிடைப்பது அருமையான விஷயம். எனது பார்ட்னருக்கு எந்த சிக்கலும் தராத ஒரு உறவை தரவே விரும்புகிறேன்.

அன்பையும் பாசத்தையும் எப்படி சிறந்த முறையில் தர நான் எண்ணுகிறே னோ அதே அளவுக்கு அவரும் என் மீது அன்பும் பாசமும் காட்டக் கூடியவராக இருக்க வேண்டும். அப்படியொருவரை நான் தேர்வு செய்துவிட்டேன்.

அவர் மீது ஆழமான காதல் வைத்திருக்கிறேன். அவருடன் டேட்டிங் மட்டுமே செய்துகொண்டிருக்காமல் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு கங்கனா ரனாவத் கூறினார்.

தனது ரகசிய காதலன் யார் என்பதை வெளிப்படையாக கூறாமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்.

.

மூலக்கதை