எழுத்தாளர் கதையில் நடிக்கும் மஞ்சுவாரியருக்கு மிரட்டல்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
எழுத்தாளர் கதையில் நடிக்கும் மஞ்சுவாரியருக்கு மிரட்டல்?

மல்லுவுட் நடிகர் திலீப் மாஜி மனைவி மஞ்சுவாரியர். திருமண முறிவுக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

மலையாள பெண் எழுத்தாளர் கமலா தாஸ் வாழ்க்கை கதை ஆமி பெயரில் உருவாகிறது. கமல் இயக்குகிறார்.

இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்புக்கொண்டிருந்தார். படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென்று படத்திலிருந்து விலகி கொள்வதாக இயக்குனரிடம் தெரிவித்தார்.

ஒரு அமைப்பினர் விடுத்த மிரட்டலையடுத்தே வித்யாபாலன் விலகியதாக கூறப்படுகிறது. அதுகுறித்துகேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

தற்போது கமலா தாஸ் கதாபாத்திரத்தில் நடிக்க மஞ்சு வாரியர் தேர்வாகியிருக்கிறார்.

இதற்காக உடலில் வெயிட் கூட்டும்படி அவரிடம் இயக்குனர் கேட்டுக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்புக்கான வேலைகள் நடந்துவரும் நிலையில், மஞ்சுவாரியருக்கும் அப்பாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என பலர் இணைய தளம் மூலம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   மறைமுக மிரட்டலாகவே இதுவும் பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்தால் மஞ்சுவாரியரின் தோற்றம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுவிடும் என்று கூறி வயதான தோற்றத்தில் அவர் எப்படி இருப்பார் என்பதையும் கிராபிக்ஸில் வரைந்து அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து மஞ்சுவாரியர் எந்த பதிலும் கூறாமல் மவுனம் காக்கிறார்.

.

மூலக்கதை