சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பூம்..பூம்... அப்ரிடி ஓய்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பூம்..பூம்... அப்ரிடி ஓய்வு

லாகூர்:  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான அப்ரிடி டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2010ம் ஆண்டு ஓய்வு பெற்ற நிலையில், ஒருநாள் போட்டிகளில் இருந்து 2015ம் ஆண்டு உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெற்றார். டி. 20 போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த டி. 20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்து முதல் சுற்றுடன் வெளியேறியது.

இதனால் அப்ரிடியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டதுடன் அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். பிரியா விடை போட்டியில் விளையாடுவதற்காவது வாய்ப்பு கிடைக்கும் என அப்ரிடி எதிர்பார்த்த நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளவில்லை.



தற்போது பாகிஸ்தான் பிரிமியர் லீக்கில் ஆடிவரும் அப்ரிடி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 1996ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த அப்ரிடி இலங்கைக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.

27 டெஸ்ட்டில் ஆடி 5 சதத்துடன் 1716 ரன்னும்,  48 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார். 398 ஒரு நாள் போட்டிகளில் 6 சதத்துடன் 8064 ரன்களை குவித்துள்ளார்.

அதிகபட்சமாக 124 ரன் எடுத்துள்ளார். 395 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

98 சர்வதேச டி20 போட்டியில் 1405 ரன்னும், 97 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். எந்த ஒரு வரிசையில் களம் இறங்கினாலும் அதிரடியாக ஆடும் அப்ரிடியை ரசிகர்கள் பூம். . பூம்.

அப்டிரி என அழைப்பதுண்டு. இம்ரான்கானுக்கு பின் பாக்.

அணியில் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலித்த அப்ரிடியின் 21 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. டெஸ்ட், ஒன்டே மற்றும் டி. 20 போட்டி என மூன்றிலும் அப்ரிடியின் கடைசி ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை