வரலாற்று சாதனை படைத்தார் அஸ்வின்!

PARIS TAMIL  PARIS TAMIL
வரலாற்று சாதனை படைத்தார் அஸ்வின்!

 இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்காள தேச அணி 388 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டு களையும் இழந்துள்ளது.

 
கடந்த 9ம் திகதி ஐதராபாத்தில் தொடங்கிய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 687 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
 
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கி வங்காள தேச அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 322 ஓட்டங்கள் எடுத்தது.
 
அணித்தலைவர் முஷ்பிகுர் ரஹிம் 81 ஓட்டங்களுடனும், Mehedi Hasan Miraz 51 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
இந்நிலையில், இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடி வங்காள தேச அணி 388 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்காள தேச அணித்தலைவர் ரஹிம் 127 ஓட்டங்கள் எடுத்தார்.
 
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கடைசி விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் 45 டெஸ்ட் போட்டிகளில் மிக வேகமாக 250 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனை அவர் படைத்துள்ளார். மேலும், 48 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த அவுஸ்திரேலிய வீரர் டெனிஸ் லில்லி சாதனையை முறியடித்துள்ளார்.
 
இந்திய அணி தரப்பில் யாதவ் மூன்று விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
தற்போது, இந்திய அணி 299 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்கில் விளையாடி வருகிறது. இன்றும், நாளையும் மீதமுள்ள நிலையில் இந்திய வெற்றிப்பெற அதிக வாய்ப்புள்ளது.

மூலக்கதை