நாயின் வயிற்றைக் கிழித்து காணொளி வெளியிட்ட இளைஞன்! - சிறையில் அடைப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
நாயின் வயிற்றைக் கிழித்து காணொளி வெளியிட்ட இளைஞன்!  சிறையில் அடைப்பு!!

நாய் ஒன்றின் வயிற்றை கிழிப்பதுபோல் காணொளி ஒன்றை வெளியிட்ட குற்றத்துக்காகவும், பயங்கரவாதிகளின் தொலைபேசியை வைத்திருந்த குற்றத்துக்காகவும் இளைஞன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளான். 
 
மேற்படி இளைஞன் 19 வயதுடையவன் என்றும், சமூக வலைத்தளமான YouTubeஇல், பதிவேற்றிய காணொளி காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Yvelines மாவட்டத்தின் Mantes-la-Ville பகுதியில் வைத்து குறித்த இளைஞனை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த அந்த காணொளியில், நாய் ஒன்றினது வயிற்றைக் கிழிப்பது போல் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 'பயங்கரவாதத்தை தூண்டும் விதமாக காணொளி இருந்ததும், மேலும் பயங்கரவாதி ஒருவனது தொலைபேசியை வைத்திருந்ததும் காவல்துறை அதிகாரி ஒருவரால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. சந்தேகமில்லாத பயங்கரவாத தூண்டுதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேற்படி காணொளி YouTube தளத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. கானொளியை 50 பேர் வரை பார்வையிட்டிருந்ததாகவும், ஆனால் சிலர் காணொளியை தரவிறக்கி WhatsApp போன்ற ஊடகங்கள் மூலம் பரவப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை