நியூஜெர்சி நகரில் விமான விபத்து: பயங்கர சப்தம் கேட்டதால் மக்கள் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்

நியூஜெர்சி: அமெரிக்காவில் வானில் சென்ற சிறிய விமானம் ஒன்று குடியிருப்புகளுக்கு மத்தியில் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நியூஜெர்சி நகரில் மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் திடீரென பயங்கர சப்தம் கேட்டது. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் விமானம் ஒன்று கார்களுக்கு இடையே நொறுங்கிக்கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். விபத்தில் சிக்கிய விமானத்தில் உயிருக்கு போராடிய பைலட்டை மீட்ட பொதுமக்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வீடுகள் மீது விமானம் விழுந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை