ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் கோத்தபாயவை மாட்டி விட மஹிந்த திட்டம்!

PARIS TAMIL  PARIS TAMIL
ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் கோத்தபாயவை மாட்டி விட மஹிந்த திட்டம்!

 ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நாடொன்றுக்கு பாதுகாப்பு ஆலோசனை வழங்க கோத்தபாய செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

 
ஆசியாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நாடொன்றில் பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு கோத்தபாய செல்ல தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த தீர்மானித்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 
 
கோத்தபாயவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் மோசடி குற்றச்சாட்டினால் விரைவில் அவர் கைது செய்யப்படும் நிலை காணப்படுவதனால், பாதுகாப்பு நடவடிக்கையாக நாட்டை விட்டு செல்வதற்கு கோத்தபாய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதேவேளை கோத்தபாயவை அடுத்த ஜனாதிபதியாக்கும் முயற்சியில் சிறிலங்கா வங்குரோத்து அரசியல்வாதிகள் தீர்மானித்துள்ளனர். அதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். 
 
2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை போட்டியிட வைப்பதற்காக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற அரசியல்வாதிகள் பலரும், திலித் ஜயவீர, டிரான் அலஸ் போன்ற வர்த்தகர்களும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
 
ஆனால் கோத்தபாயிவின் அரசியல் செயற்பாட்டுக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். 
 
சிறிலங்காவில் மக்கள் பலம் தனக்கே உள்ளதாகவும், தனது சகோதரர்களுக்கு மக்கள் பலம் இல்லை எனவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
 
அண்மையில் ஒருநாள் பவித்ரா வன்னிஆராச்சி, ரோஹித அபேகுவர்தன, பிரச்சன ரணதுங்க போன்றோர் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து கூட்டு எதிர்க்கட்சியின் ஏற்பாட்டாளராக பசிலை நியமிக்க வேண்டும் என யோசனை முன்வைத்துள்ளன. அந்த கருத்திற்கு மஹிந்த கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
கொழும்பை சுற்றியுள்ள நகர மக்கள் மாத்திரம் கோத்தபாய ராஜபக்ச திறமையானவர் என அடையாளம் கண்டுள்ள போதிலும், தான் அந்த பகுதியில் தோல்வியடைந்ததாகவும், பசில் கம்பஹா பகுதிக்கு பணத்தை அதிகம் செலவிட்ட போதிலும் தான் அந்த தொகுதியிலும் தோல்வியடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதனால் தனது சகோதரர்கள் இருவரும் வெற்றிகரமான அரசியல்வாதிகள் அல்ல எனவும், தன் மீதே மக்கள் அதிகம் விருப்பம் கொண்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கு, மஹிந்த தெளிவுப்படுத்தியுள்ளார்.
 
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தான் தெளிவான வெற்றியை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரமே பெற்றேன் அங்கு அனைத்து ஏற்பாடுகளும் நாமலினாலே மேற்கொள்ளப்பட்டது. தனது அரசியல் வாரிசாக செயற்படுவதற்கு தகுதியானவர் நாமல் எனவும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

மூலக்கதை