துளித்துளியா ...

தினகரன்  தினகரன்

ஆஸ்திரேலிய அணியுடன் விக்டோரியாவில் நேற்று நடந்த 2வது டி20 போட்டியில், 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற இலங்கை அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா 20 ஓவரில் 173 ஆல் அவுட் (கிளிங்கர் 43, டங்க் 32, ஹென்ரிக்ஸ் 56*). இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன் (குணரத்னே 84*, கபுகேதரா 32). ஆட்ட நாயகன்: குணரத்னே. 3வது மற்றும் கடைசி டி20 போட்டி அடிலெய்டில் 22ம் தேதி நடக்கிறது.ஐபிஎல் டி20 தொடருக்கான 10வது சீசன் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக நடப்பு சீசனில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஓபன் டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் அசந்தா சரத்கமல், ஜப்பானின் 13 வயது டொமோகாஸு ஹோரிமோட்டோவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பைனலில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய கிராண்ட்ஹோம் 34 ரன் (19 பந்து, 3 சிக்சர்), சவுத்தீ 24 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மோரிஸ் 4, ரபாடா 2, ஷம்சி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 33.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்து வென்றது. டி காக் 69, அம்லா 35, டு பிளெஸ்ஸி 14, டுமினி 1, பெகார்டியன் 0, மோரிஸ் 16 ரன்னில் ஆட்டமிழந்தனர்.கேப்டன் டி வில்லியர்ஸ் 37 ரன், பெலுக்வாயோ 29 ரன்னுடன் (23 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் 22ம் தேதி நடக்கிறது. தொடர்ச்சியாக 12வது ஒருநாள் போட்டியில் வெற்றியை வசப்படுத்திய தென் ஆப்ரிக்கா, தனது முந்தைய சாதனையை சமன் செய்துள்ளது.

மூலக்கதை