நியூசிலாந்துடன் முதல் ஒருநாள் போட்டி தென் ஆப்ரிக்கா வெற்றி

தினகரன்  தினகரன்

ஹாமில்டன்: நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், தென் ஆப்ரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டி, மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியதால் தலா 34 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக அறிவிக்கப்பட்டது. டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. நியூசிலாந்து 34 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 207 ரன் குவித்தது. பிரவுன்லி 31, கேப்டன் கேன் வில்லியம்சன் 59 ரன் (53 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), நீஷம் 20, சான்ட்னர் 17 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

மூலக்கதை