பினாமி ஆட்சியை அகற்றி மக்கள் ஆட்சியை நிலைநாட்டும் வரை போராட்டம் ஓயாது: ஸ்டாலின்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பினாமி ஆட்சியை அகற்றி மக்கள் ஆட்சியை நிலைநாட்டும் வரை போராட்டம் ஓயாது: ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் பினாமி ஆட்சியை அகற்றி மக்கள் ஆட்சியை நிலைநாட்டும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது: எதிர்கட்சி தலைவர் என்ற பொறுப்புக்கும் கூட மரியாதை தராமல் வாகனத்தை சோதனையிட்டனர். மக்களாட்சியை நிலை பெறச் செய்யும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது. நம்பிக்கை தீர்மானத்தை சட்டமன்றத்தில் இரண்டு முறை முன்மொழிந்தார் சபாநாயகர். இது சட்டவிரோதமாகும்.

அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை அவசரமாக நடத்த கூடாது என வலியுறுத்தினோம், மக்கள் கருத்துகளை அறிந்து சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க அவகாசம் அளிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்துவிட்டார். பினாமி ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சபாநாயகர் செயல்படுகிறார்.

பெங்களூர் சிறையில் உள்ள குற்றவாளியின் பினாமி ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்துகிறார். சட்டமன்றத்தை ஜனநாயகம் செத்த மன்றம் ஆக்கிவிட்டனர். தமிழகத்தில் நடைபெறும் பினாபி ஆட்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே மக்களின் குரல். இந்த ஆட்சியை அகற்றி மக்கள் ஆட்சியை நிலைநாட்டும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது என்றார்.

மூலக்கதை