அடுத்த அதிரடியை ஆரம்பிக்கவுள்ள ட்ரம்ப்!

PARIS TAMIL  PARIS TAMIL
அடுத்த அதிரடியை ஆரம்பிக்கவுள்ள ட்ரம்ப்!

 அமெரிக்காவுக்குள் நுழைய 7 முஸ்லீம் நாடுகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டமைக்கு, அந்நாட்டு நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத வகையில் வரையறுக்கப்படும் புதிய சட்டம் அடுத்த வாரமளவில் வெளியிடப்படுமென என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 
குறித்த புதிய குடியுரிமை தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் கூறியதாவது, சிரியா அகதிகள் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையிலும், 7 முஸ்லீம் நாட்டு மக்களுக்கு விசா வழங்குவது தொடர்பான எனது உத்தரவுக்கு தடை விதித்த நிலையில் புதிய குடியுரிமை உத்தரவு அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும்.
 
எனது உத்தரவு முடக்கப்பட்டது மிகவும் மோசமானது என்று நினைக்கிறேன். அதை புதிய நிர்வாக உத்தரவு சரிசெய்யும். நீதிமன்ற உத்தரவு பாதிக்காதபடி என்னென்ன நடைமுறைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக உலகிலேயே மிகச்சிறந்த சட்டத்தரணிகள் பணியாற்றி வருகிறார்கள். என கூறினார்.
 
ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, யேமன் ஆகிய 7 முஸ்லீம் நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடைவிதித்ததையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்தன. இதனால் இதனை கருத்திற்கொண்டு ட்ரம்பின் உத்தரவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை