டோனி அதிரடி நீக்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
டோனி அதிரடி நீக்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி ஐபிஎல் அணியின் தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து சென்ற ஆண்டு புதிதாக களமிறங்கிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி டோனியை ஏலத்தில் எடுத்தது.
 
சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் புனே அணித்தலைவராக களமிறங்கி டோனி கலக்கினார். இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒருநாள் மற்றும் டி20 அணித்தலைவர் பதவியில் இருந்து மகேந்திரசிங் டோனி விலகினார்.
 
இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. எனினும், டோனி ஐபிஎல் மற்றும் மாநில அணியின் தலைவராக திகழ்வார் என வெளியான தகவல்கள் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.
 
இந்நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணித்தலைவர் பதவியலிருந்து டோனி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
டோனிக்கு பதிலாக அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் டோனி ரசகர்கள் கடும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர்.

மூலக்கதை